துருவங்கள் பதினாறு, நரகாசுரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன் ‘கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் நடிகராகியிருக்கிறார்.

திருடன் பொலிஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜு தற்பொழுது ‘கண்ணாடி’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் .இதில் மாநகரம் புகழ் நடிகர் சந்திப் கிஷன்  கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அன்யா சிங் என்ற புதுமுக நடிகை அறிமுகமாகிறார். 

இந்த படத்தில் இடம்பெறும் முக்கிய வேடத்தில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் நடிக்கிறார்.  இவர் நடிக்க ஒப்புக்கொள்ளும் முதல் படமிது. இது குறித்து அவர் பேசுகையில்,

“ நாயகன் சந்திப் கிஷன் எம்முடைய இனிய நண்பர். இளமையான தோற்றத்துடன் ஒருவர் வேண்டும் என்று இயக்குநர் இசரிடம் கூற , இவர் எம்மை பரிந்துரைக்க, நான் நடிகராகியிருக்கிறேன். ” என்றார்.

இந்த படத்தில் இவருடன் ராஜுமுருகன் இயக்கிய ‘குக்கூ’ என்ற படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா நாயரும் முக்கிய வேடத்தில்  நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே சமயத்தில் தயாராகும் திரில்லர் படமான ‘கண்ணாடி ’மூலம் நடிகராகவும் உயர்ந்திருக்கும் கார்த்திக் நரேனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று திரை உலகினர் எதிர்பார்க்கிறார்கள்.

இதனிடையே இயக்குநர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க அருண் விஜய் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.