போதைக்கு எதிரான ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சித்திரை புதுவருட உறுதி உரை நிகழ்வு இன்று வவுனியா மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட செயல உத்தியோகத்தர்களினால் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புதுவருட சத்தியபிரமானம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்டசெயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.