(எம்.எப்.எம்.பஸீர்)

மின்சார தடை தொடர்பிலான அறிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்காமை தொடர்பிலான விடயம் குறித்து ஆராய இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதி மன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் 9 உயர் அதிகாரிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒன்பது பேரையும் மன்றுக்கு அழைக்குமாறு கோரி பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நீதிமன்றில் தாக்கல்ச செய்த மனுவை ஆராய்ந்தே கோட்டை நீதிவான் ரங்க திஸாநயக்க இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.