பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில்   பூனை மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அங்கு செல்லும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுற்குள்ளும், தவிர நோயாளர் விடுதிகளிலும் பூனை மற்றும் நாய்கள் சுதந்திரமாக உலாவுவதுடன் அவை நிரந்தரமாக தங்கியிருக்கின்றன.

அவை நோயாளர்களின் உணவையும் எடுத்து உட்கொள்வதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதாரத் தரப்பினர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.