அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தின் போர்ட்லேண்ட் நகரிலுள்ள, மேய்ன் (Maine) வைத்தியசாலையில் பணியாற்றும் ஒன்பது தாதியர்களும்  ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். 

குறித்த பெண்கள் 9 பேரும் இம்மாதம் மற்றும் ஜுன் மாதங்களில் குழந்தையை பிரசவிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவத்தால் வைத்தியசாலையில் பணிபுரிவோர் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கர்ப்பிணி தாதியர்களுக்கு தங்களால் முடிந்த ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மேற்படி தாதியர்களில் ஒருவரைத் தவிர, ஏனைய 8 பேரும் கடந்த வாரம் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

குறித்த படங்கள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.