ரபேல் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய நூலிற்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரபேல் ரக விமானங்களை கொள்வனவு செய்வதில் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி இதில்  பிரதமர் மோடிக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது

இந்நிலையில் நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல் என்ற பெயரில் எழுத்தாளர் விஜயன் நூலொன்றை எழுதியுள்ளார்.

இந்த நூலை நேற்று வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் இந்தியாவின் தேர்தல் ஆணையம் இந்த நூலிற்கு தடைவிதித்துள்ளதாக தெரிவித்த தேர்தல்கால பறக்கும் படையினர் குறிப்பிட்ட நூலை அதனை வெளியிட்ட பாரதி பதிப்பகத்திலிருந்து பறிமுதல் செய்தனர்

இதேவேளை இவ்வாறு நூலை பறிமுதல் செய்வது ஜனநாயகவிரோத சட்டவிரோத நடவடிக்கை என இந்து ராம்; கருத்து வெளியிட்டுள்ளார்.

இது கருத்துசுதந்திரம் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என ராம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட நூலை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது