வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (02.04) இரவு 10.30மணியளவில் கஞ்சாவினை தனது உடமையில்  வைத்திருந்த  நபர் ஒருவரை போதை ஒழிப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நேற்று இரவு 10.30மணியளவில் பொல்காவல பகுதியை சேர்ந்த மொகமட் றிஷால் முகமட் (வயது-54) என்பவர்  வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நின்றிருந்த போது சந்தேகத்தின் அடிப்படையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.தென்னக்கோன் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்ட போது 6கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை ஒழிப்பு பிரிவினர் கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று  நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.