ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த தினம் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாண சுகாதார பணிப்பாளரை தூற்றி அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

தெமோதர வைத்தியசாலைக்கு நடுவில் வீதியொன்றை அமைப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து அது தொடர்பில் முதலமைச்சருக்கும் மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் முதலமைச்சர் சுகாதார  பணிப்பாளரை  தூற்றி அச்சுறுத்தியதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண முதலமைச்சர் , சுகாதார பணிப்பாளரிடம் மன்னிப்பு கோரும் வரையில் தமது பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண உறுப்பினர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.