துருக்கியில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் கசோக்கியின் பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கான சொத்தை சவுதி அரசு வழங்கியுள்ளது.

துருக்கியில் வைத்து கொல்லப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கிக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு சவுதி அரசு, வீடு, இழப்பீடு என பணத்தை கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த 59 வயதுடைய பத்திரிகையாளர் ஜமால் கசோகி அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றி வந்தார்.

 இவர் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின்  மன்னராட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார். 

இதையடுத்த அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மர்மமாக கொலை  செய்யப்பட்டார்.

இந்நிலையில், கசோகியின் வாரிசுகளுக்கு சவுதி அரேபிய அரசு சொத்துக்கள் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

இதேவேளை, கசோக்கியின் கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், கசோக்கி வாரிசுகளின் எதிர்ப்புக்கு முகங்கொடுக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் 27 கோடி ரூபா மதிப்பிலான வீடுகள் மற்றும் ஒவ்வொரு மாதமும் தலா ஒருவருக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.