ஐ..பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
ஐ.பி.எல் தொடரின் 14-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
முதலில் நாணய சுலட்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தலைவர் ரகானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், பார்திவ் படேலும் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 49 ஆக இருக்கும்போது விராட் கோலி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அவரையடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் 13 ஓட்டங்களுடனும், ஹெட்மையர் ஒரு ஓட்டதுடனும் ஆட்டமிழந்தனர்.
மறுபுறம் நிதானமாக ஆடிய பார்திவ் படேல் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரை சதமடித்தார். அவர் 41 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரியுடன் 67 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் ஓரளவு ஓட்டங்களைச் சேர்த்தார்.
இறுதியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கனை எடுத்தது. ஸ்டோனிஸ் 31 ஓட்டங்களுடனும், மொயின் அலி 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல் அணியில் முதலில் களம் இறங்கிய ரகானேவும், பட்லரும் தங்கள் ஆட்டத்தின் திறமையை வெளிப்படுத்தினர். இதில் ரகானே 22 (20) ஆட்டத்தின் 7.4 வது ஓவரில் சஹாலின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் பட்லர் 59 (43) ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தின் 12.4 ஓவரில் சஹாலின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்ததாக களம் இறங்கிய ஸ்மித்தும், திரிபாதியும் ஜோடி சேர்ந்து தங்களது அணிக்கு ஓட்டங்களை குவித்தனர். இதனிடையே ஆட்டத்தின் 18.6 ஆவது ஓவரில் ஸ்மித் 38 (31) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் வீசிய பந்தில் யாதவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இறுதியில் திரிபாதி 34 (23) , ஸ்டோக்ஸ் 1 (2) ஜோடி சேர்ந்து தங்களது அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த சஹால் 2 விக்கெட்டும், சிராஜ் 1 விக்கெட்டையும் பெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM