மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் திமுத் கருணாரத்னவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனம் செலுத்தி முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொரளை பகுதியில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் திமுத் கருணாரத்ன அன்றே பிணையில்  விடுவிக்கப்பட்ட நிலையில் மறுநாள் திமுத் கருணாரத்ன நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின், குறித்த விபத்தை ஏற்படுத்தியமைக்காக அவருக்கு 7000 அமெரிக்க டொலர் அபராதம்  விதிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது