120 இலட்சம் ரூபாய் பணத்தை காசோலை மூலம் மோசடி செய்த தேசிய நீர் வழங்கல் சபையின் களனி பிரதேச அலுவலகத்தின் முன்னாள் கணக்காளரொருவருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது , சந்தேகநபருக்கு 40 இலட்சம் ரூபா அபராதமும் மற்றும் தேசிய நீர் வழங்கல் சபைக்கு 130 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் குறித்த அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிய ஆனந்த மாபோல என்ற இவர் அதன் முகாமையாளரின் கையொப்பத்தை போலியான முறையில் பயன்படுத்தி அந்த சபைக்கு  சொந்தமான 57 காசோலைகளில் 120 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகையை மோசடி செய்ததாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் சபையின் கணக்காளருக்கு 37 ஆண்டுகளுக்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.