திர்கால குடியிருப்பாளர்களுக்கு சௌகரியம் மற்றும் ஆடம்பரம் ஆகிய இரண்டையும் ஒன்றாக வழங்கியவாறு‘Breeze’என்ற குடியிருப்பு நிர்மாண செயற்திட்டத்தை uncity Developers ட்டுப்பெத்தையில் ஆரம்பித்துள்ளது.

 நான்கு மாடிகளைக் கொண்ட இந்த ஆடம்பர அடுக்குமனை வளாகம் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட 24 அடுக்குமனைகளைக் கொண்டுள்ளதுடன் உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் தடாகம் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளன. 

கட்டுபடியாகும் வகையில் சௌகரியமான வாழ்க்கைமுறைக்கு வழிகோலும் இந்த செயற்திட்டமானது டி சொய்சா சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ளதுடன் வர்த்தகப் பிரதேசமான கொழும்பிலிருந்து வெறும் முப்பது நிமிட பிரயாணத்தில் இலகுவாக சென்று வர முடியும். 

பல அடுக்குமனைகள் கடலின் இரம்மியமான அழகைக் கண்டுகளிக்கும் வண்ணம் அமைந்துள்ளதுடன் ஏனையவை சைக்கிள் மற்றும் நடை பயிற்சி செய்யும் இடத்தை நோக்கியுள்ளன.

“கலைநயம்மிக்க ஈர்ப்புடன் அதியுயர் தரம் கொண்ட எமது அடுக்குமனை வளாகங்களில் ஆடம்பரமான மற்றும் சௌகரியமான வாழ்வை முன்னெடுக்கும் வாய்ப்பினை நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகின்றோம்.

 எமது ஆதன நிர்மாண செயற்திட்டங்கள் அனைத்தும் பொதுவாகவே மேற்குறிப்பிட்ட பண்புகளைக் கொண்டவை. அதற்கு Breeze எவ்விதத்திலும் விதிவிலக்கு கிடையாது. வடிவமைப்பு முதல் சௌகரியம் வரை உயர் தரம் மீது நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டினை Breeze தொடர்ந்தும் கட்டிக்காத்துள்ளது” என்று Suncity Developers பணிப்பாளர் சபைத் தலைவரான பின்சிறி பெர்னாண்டோ  குறிப்பிட்டார்.

மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட அடுக்குமனைகள் ஒவ்வொன்றும் அதன் பிரதான படுக்கை அறை குளிரூட்டப்பட்டதுடன், இணைந்த குளியலறையையும் (சுடுநீர் வசதிகள் அடங்கலாக) கொண்டுள்ளன. 

அத்துடன் சமையலறை இறக்குமதி செய்யப்பட்ட சமையலறை இராக்கைகளுடனான உணவு பரிமாறும் இடம் தாராள இட வசதி கொண்ட உட்காரும் இடம் வீட்டுப் பணியாளர்களுக்கென வேறான தங்குமறை போன்ற வசதிகள் உள்ளன. 

அடுக்குமனைகள் 1,283 சதுர அடி முதல் 1,400 சதுர அடி வரையான விஸ்தீரணத்தைக் கொண்டுள்ளதுடன், நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக்கூடம்,மேல் மாடி தோட்டம் மற்றும் பொது இடங்களுக்கு மின்சார வசதியை வழங்குவதற்கு ஆதார மின்பிறப்பாக்கி போன்ற பொது வசதிகளும் உள்ளன.

அனுபவம் வாய்ந்த ஆதன நிர்மாணிப்பாளரான Suncity Developers  கொழும்பு மற்றும் புறநகரங்களில் பல ஆடம்பர மற்றும் அரைச் சொகுசு அடுக்குமனைச் செயற்திட்டங்களை நிர்மாணித்துள்ளது. nraw;jpl;lq;fis epu;khzpj ;Js;sJ. Rosmead

Towers, Horton Towers, Horton Regency, MC Cathy Towers, கொழும்பு - 3 Suncity Towers, Melbourne Towers,  பத்தரமுல்லை Suncity Towers, பத்தரமுல்லை Suncity classic towers, மொரட்டுவை Suncity Towers ஆகியன இந்த நிர்மாணிப்பு நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சில அடுக்குமனை செயற்திட்டங்களாகும்.

தனது 13 ஆவது குடியிருப்பு செயற்திட்டமான மொரட்டுவை Suncity Tower பூர்த்தியாக்கப்பட்டமை தொடர்பில் 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் Suncity Developers அறிவிப்பை வெளியிட்டிருந்ததுடன் பிம் சவிய

(Bim Saviya) என்ற தேசிய காணி உரிமை பதிவு செயற்திட்டத்தின் கீழ் முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட அடுக்குமனை வளாகம் என்ற பெருமை இதனைச் சாரும்.