கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதன்முறையாக கூகுள் ஜி-மெயில் சேவையை ஆரம்பித்தது.

ஜி- மெயில் அறிமுகமான போது, பலரும் ஜி- மெயில் சேவையை உண்மையென நம்பவில்லை, இது முட்டாள்கள் தின ஏமாற்று வேலை என்றே நினைத்தனர். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

ஏனெனில், ஜி-மெயில் ஒரு ஜிபி சேமிப்புத்திறனை அளிப்பதாக கூறியது. அப்போது பிரபலமாக இருந்த இ-மெயில் சேவைகள் அளித்த சேமிப்புத்திறனைவிட இது பல மடங்கு அதிகம்.

ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையை முட்டாள்கள் தின வேடிக்கை நிகழ்வாக இன்றைய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருதியதாக தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டின் அக்டோபர் மாத முடிவில் மாதந்தோறும் 1.5 பில்லியன் பயனாளர்களால் இந்த சேவை பயன்படுத்தபட்டு வருகின்றது. போல் புச்சீட் தலைமையில் கூகுள் மெயில் அல்லது ஜி- மெயில் வெளியிடப்பட்டது.  கூகுள் ஜி-மெயில் ஆரம்பிக்கப்பட்ட தினம் நேற்றாகும். 

2004 ஆம் ஆண்டு கூகுள் மெயில் அல்லது ஜி - மெயில் சேவை போல் புச்சீட்  Paul Buchheit தலைமையில் தொடங்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் சோதனை முறையில் அழைப்பவர்கள் மட்டும் ஜி- மெயிலின் சேவையை பெறுவர் என கடந்த 2007 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது ஜி-மெயில் மாதந்தோறும் 1.5 பில்லியன் பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் யாகூ மெயில் 228 மில்லியன் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. அறிமுக காலத்தில் ஒரு ஜிபி அளவிற்கு மட்டும் இடவசதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 15 ஜிபி வரை இலவச இடவசதி வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவன லாரி பேஜ் அளித்த பேட்டியில்,

ஜி - மெயில் சேவை அறிமுகத்தின் பின்னரே கூகுள் தேடு பொறி என்பதனை கடந்து புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது.

இன்றைக்கு கூகுள் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளே, ஸ்பேம் மின்னஞ்சல் தடுப்பு உட்பட, மிக நேர்த்தியான பல்வேறு வசதிகளை கொண்டதாக அமைதிருக்கின்றது.

தமிழ் உட்பட 39 மொழிகளில் இ-மெயில் சேவையை கூகுள் வழங்கி வருகின்றது.

நாள்தோறும் கோடிக்கணக்கான ஸ்பேம் மெயில்களை இந்நிறுவனம் தனது Superior spam protection மூலம் தடுக்கின்றது.

அண்ட்ராய்டின் பிளே ஸ்டோர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பில்லியன் மொபைல்களில் இன்ஸ்டோல் செய்யப்பட்ட முதல் செயலி என்ற பெருமையை கூகுள் மெயில் பெற்றது.

முதல் ஜி - மெயில் முகப்பு தோற்ற படம் கூகுள் இன்றைக்கு கூகுள் மேப், ஆண்ட்ராய்ட், யூடியூப், செல்ஃப் டிரைவிங் கார் என பல்வேறு அம்சங்களை பெற்று மிகப்பெரிய டெக் நிறுவனமாக வலம் வருகின்றது.