டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சாம் கர்ரன் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்றிருந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு 167 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அண 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

இதனிடையே பஞ்சாப் அணி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் போது அந்த அணியின் பந்து வீச்சாளர் சாம் கர்ரன் 2.2 ஓவரகளை மாத்திரம் வீசி 11 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

அதுமாத்திரமின்றி 17 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஹர்சல் படேலை டக்கவுட் முறையிலும், 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் ரபடாவையும், இரண்டாவது பந்தில் லெமிச்சேனையைும் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க செய்து, மூன்று விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். அரங்கில் ஹெட்ரிக் எடுத்த 18 ஆவது வீரர் என்ற பெருமையையும் சாம் கர்ரன் பெற்றுள்ளார்.