கொழும்பு பொரளையில் மதுபோதையில்  வாகனத்தை செலுத்தி விபத்தை  ஏற்படுத்தி ஒருவரை காயப்படுத்தியமை குறித்து இலங்கை  டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண மன்னிப்பு கோரியுள்ளார்

திமுத் கருணாரட்ண தனது முகப்புத்தகத்தில் இதனை பதிவு செய்துள்ளார்

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது.

நான் எனது வீட்டை நோக்கி செல்வதற்காக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தவேளை சிறு விபத்தொன்று இடம்பெற்றது.

சிறிய காயங்களிற்கு உள்ளான வாகனத்தின் உரிமையாளரிடம் நான் மன்னிப்பு கோரவேண்டும்,அவர் இந்த விடயத்தை என்னுடன் நேரடியாக மிகவும் சுமூகமான முறையில் தீர்த்துக்கொண்டார்.

அவர் மருத்துவமனையில் கண்காணிப்பிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்

அவரது நலம் குறித்த எனது தார்மீக அக்கறை குறித்தும் அவர் குறித்து சிறந்த அக்கறை எடுக்கப்படும் எனவும் நான் உறுதியளிக்கின்றேன்.

நான் நீதிமன்றில் ஆஜராகி உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றினேன்.எனது தரப்பிலிருந்து தேவையான அனைத்து சட்டபூர்வ கடமைகளையும் நான் நிறைவேற்றுவேன்.

எனது நடவடிக்கைகள் முற்றாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவருக்குரியவையில்லை என்பதை நான் அறிவேன்,நான் இந்த சம்பவத்திற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகின்றேன்.