வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் கரடியின் தாக்குதலிற்குள்ளாகி காயமடைந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், 

நேற்று காலை வயல்வெளிக்கு சென்ற  நபர் ஒருவர் மீது பற்றை ஒன்றிற்குள் மறைந்திருந்த மூன்று கரடிகள் தாக்கியுள்ளது. 

எனினும் குறித்த நபர் கரடியின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் தப்பி ஓடியுள்ளார்.

குறித்த சம்பவத்தில்  42  வயதுடைய  நபரே கையில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.