(இராஜதுரை ஹஷான்)

நிலையற்ற அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக குறிப்பிடுவது நகைச்சுவையானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, வரவு- செலவு திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பினை எதிர்கொள்ள தயார் எனவும் குறிப்பிட்டார்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாங்கம் தற்போது  செயற்பாட்டில் இல்லை மாறாக மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும்  செயற்பாடுகளே இடம்பெறுகின்றது. 

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் தற்போது முன்னெடுப்பு நடவடிக்கைகள் இடம் பெறுகின்றது.  இது எந்த அளவிற்கு சாத்தியமடையும் என்று குறிப்பிட முடியாது எனவும அவர் மேலும் தெரிவித்தார். 

நச்சுத்தன்மையற்ற உணவுகள் தொடர்பிலான கண்காட்சி   பண்டாரநாயக்க ஞாபகாரத்த மாநாடு மண்டபத்தில் இடம்பெறுகின்றது. இக்கண்காட்சிக்கு இன்று வருகை தந்த வேளை ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.