இரத்தினபுரி - அயகம பகுதியில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் அதில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், அயகம - சிங்களகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய செவனு ராஜரட்னம் எனப்படுபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியாசலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார், மேலதிக  விசாரணகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.