ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கினேஸ்­வ­ர­னுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்பு இன்று இடம்பெறவிருந்தநிலையில் குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுகவீனமுற்றுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் நிலவு காணி பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும்,  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் இடையில் நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பே பிற்போடப்பட்டுள்ளது.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெ­ற­விருந்த இந்த சந்­திப்பில் வடக்கு மக்­களின் காணிப் பிரச்­சினை மற்றும் சிவில் நிர்­வா­கத்­திற்­கான தடைகள், வடக்கு மக்­களின் விடு­விக்­கப்­ப­டாத காணிகள், விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மக்­களால் குடி­யே­ற­மு­டி­யாத நிலை உள்­ளிட்ட சிவில் நிர்­வா­கத்­திற்­குள்ள தடைகள் போன்ற பிரச்­சினை­களை மையப்­ப­டுத்­தியே இன்று குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.