ஈ.பீ.கிறீஸி குழுமத்தின் துணை நிறுவனமும், கல்வனைசுப்படுத்திய கம்பி உற்பத்தியில் முன்னோடியுமான, லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (லங்கா SSL), மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மூலப்பொருட்கள் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் திணைக்களத்துடன் இணைந்து 14 மாத கால ஆய்வை அண்மையில் பூர்த்தி செய்திருந்தது.
இந்த ஆய்வினூடாக, லங்கா SSL இனால் உற்பத்தி செய்யப்படும் கல்வனைசுக் கம்பிகள் 25 வருட காலத்துக்கும் அதிகமான ஆயுளைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு புவியியல் நிலைகளை பொறுத்து காணப்படும் துருப்பிடிக்கும் அளவுகளை கவனத்தில் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், நிறுவனத்தின் உற்பத்தித் தரம் மற்றும் நம்பகரத்தன்மை போன்றன சர்வதேச நியமங்களுக்கமைய காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
லங்கா SSL என்பது ISO 9001: 2015 மற்றும் SLS 139: 2003 ஆகிய சான்றிதழ்களை பெற்ற நிறுவனமாகும். வருடாந்தம் 12,500 மெட்ரிக் டொன் எடை கொண்ட கல்வனைசுக் கம்பிகளின் உற்பத்தியை மேற்கொள்கின்றது. கடந்த இரண்டு தசாப்த காலமாக கல்வனைசுக் கம்பிகள் தயாரிப்பு உற்பத்தியாளர்களின் முதல் தெரிவாக திகழ்வதுடன், லங்கா SSL சந்தையின் ஒப்பற்ற முன்னோடியாகவும் திகழ்கிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் 80 சதவீதத்திற்கும் அதிகமான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், சர்வதேச ரீதியிலும் இந்த தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
லங்கா SSL பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பிரவீன் த சில்வா தெரிவிக்கையில், “மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்த ஆய்வின் பெறுபேறுகளை பெற்றுக் கொண்டமை தொடர்பில் நாம் பெருமளவு மகிழ்ச்சியடைகிறோம். இதனூடாக எமது உற்பத்தி செயன்முறைகளினால் பின்பற்றப்படும் ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் தர நியமங்கள் போன்றவை உறுதி செய்யப்பட்டுள்ளன. எமது உண்மையான மற்றும் தொடர்ச்சியாக எம்மை நாடும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உறுதியான கீர்த்தி மிக்க நாமத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். எமது சேவைகளை மேம்படுத்தி வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.” என்றார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அணியின் சார்பாக உரையாற்றிய கலாநிதி. எஸ்.யு.அதிகாரி குறிப்பிடுகையில், “பல்வேறு கல்வனைசுக் கம்பி மாதிரிகள் மற்றும் வெல்டிங் செய்யப்பட்ட கம்பி மாதிரிகள் தொடர்பாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 14 மாத கால ஆராய்ச்சியை நாம் முன்னெடுத்திருந்தோம். இதனூடாக நாட்டின் உலர், ஈர, கரையோர மற்றும் வரண்ட வலயங்களில் அவற்றின் துருப்பிடிக்கும் அளவை மதிப்பிடுவது எமது இலக்காக அமைந்திருந்தது. கல்வனைசுக் கம்பி தயாரிப்புகளின் வினைத்திறனுக்காக துருப்பிடிக்கும் மாதிரியொன்றை ஆய்வாளர்கள் வடிவமைத்திருந்தனர். இந்த பரிசோதனை தரவுகளினூடாக, லங்கா SSL கல்வனைசுக் கம்பிகளின் ஆயுட் காலம் 25 வருடங்களுக்கு அதிகமானது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.” என்றார். LSSL டு இனால் உற்பத்தி செய்யப்படும் கல்வனைசுக் கம்பிகள், முட்கம்பி, PVC பூசப்பட்ட சங்கிலி இணைப்பு வேலிகள், உருக்கி இணைக்கப்பட்ட வலைகள், தும்பு மிதியடிகள், மின் கேபிள் கவனம் (Electric Cable armor) உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
லங்கா SSL நிறுவனம், மூலோபாய திட்டத்துடன் உயர் வளர்ச்சியை நோக்கி, தூர நோக்குடைய தலைமைத்துவத்தின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வருவதுடன், அதன் ஊழியர்கள் நல்வாழ்வு, முன்னேற்றம் என்பவைக்கும் மதிப்பளிக்கிறது. செயன்முறை ஆய்வு மற்றும் அபிவிருத்தி மூலோபாயத்தைக் கொண்டுள்ளதுடன், தனது தயாரிப்புகளையும் சேவைகளையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளது. 2018 தேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் பாரிய பிரிவில் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டதுடன், இதர துறை உற்பத்தியாளர் பிரிவில் வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM