புத்தாண்டு பருவ காலத்தை ஒளியூட்ட சிங்கரிடமிருந்து “சூரிய கொடுப்பனவுகள்”

Published By: Digital Desk 3

01 Apr, 2019 | 03:08 PM
image

இலங்கையின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் விற்பனையாளரான சிங்கர் (ஸ்ரீ லங்கா) பிஎல்சி, இலங்கையின் நுகர்வோருக்கு புத்தாண்டை கொண்டாடும் வகையில் சிங்கர் “சூரிய கொடுப்பனவுகள்” ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சிங்கர் சூரிய கொடுப்பனவுகள் ஊடாக, சுமார் 50க்கும் அதிகமான உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிலிருந்து 1000க்கும் அதிகமான பொருட்களுக்கு எதிர்வரும் புத்தாண்டு விடுமுறை காலப்பகுதியில் விலைக் கழிவை பெற்றுக் கொடுக்க சிங்கர் முன்வந்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் பரந்தளவு பொருட்களில் தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாயுசீராக்கிகள், குளிர்சாதனப் பெட்டிகள், தளபாடங்கள், கணனிகள், ஸ்மார்ட்ஃபோன்கள், சமையலறை சாதனங்கள் மற்றும் ஓடியோ சாதனங்கள் போன்றன அடங்கியுள்ளன. இவை அனைத்தும் முன்னணி வர்த்தக நாமங்களான Singer, SISIL, Samsung, Hitachi, TCL, Beko, Sony, Huawei, Dell, Sharp, Mitsubishi மற்றும் பல நாமங்களிலிருந்து கிடைக்கின்றன. சகல சிங்கர் சூரிய கொடுப்பனவுகள் பொருட்களையும் நாடு முழுவதிலும் காணப்படும் சிங்கர் ப்ளஸ், சிங்கர் மெகா, சிங்கர் ஹோம்ஸ் மற்றும் சிசில் வேர்ள்ட் காட்சியறைகளிலிருந்தும், சிங்கர் ஒன்லைன் ஸ்ரோரான www.singersl.com ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.சிங்கர் “சூரிய கொடுப்பனவுகள்” ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக நுகர்வோருக்கு தெரிவு செய்யப்பட்ட

பொருட்களை கொள்வனவு செய்யும் போது பெருமளவு இலவச தயாரிப்புகளையும் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவற்றில் சிங்கர் தொலைக்காட்சி ஒன்றுக்கு இலவச சலவை இயந்திரம் அல்லது சோஃபா கட்டில், OREGON படுக்கையறை தொகுதி ஒன்றுக்கு இலவச சிங்கர் ஸ்பிரிங் மெட்ரஸ் ஒன்று, சிங்கர் காஸ் ஒவன் ஒன்றுக்கு இலவச மைக்குரோவேவ் ஒவன் ஒன்று, சிங்கர் குளிர்சாதனப் பெட்டிக்கு இலவச சிங்கர் மின் விசிறி மற்றும் சிங்கர் ஃபுட் புரொசெசர் ஒன்றுக்கு இலவச மின் கேத்தல் ஒன்று போன்றன வழங்கப்படும்.

சகல நுகர்வோருக்கும் சிங்கர் வாடகை கொள்வனவு (Singer Hire Purchase) திட்டங்கள் போன்ற பல்வேறு தவணை முறை கொடுப்பனவு திட்டங்களை தெரிவு செய்து கொள்ளலாம். முன்னணி வங்கிகள் அனைத்துடனும் சிங்கர் கைகோர்த்து, இலகு தவணை முறை கொடுப்பனவு முறையை வழங்குவதுடன், அநேகமான அனைத்து கடனட்டை 0% சலுகைகள் 60 மாத காலம் வரை வழங்கப்படுகிறது.

சலவை இயந்திரங்களுக்கு 25,000 ரூபாய் வரை Trade-in விலைக்கழிவுகள் வழங்கப்படுவதுடன், தொலைக்காட்சிகளுக்கு ரூ. 15,000 வரை மற்றும் கணினிகள், காஸ் ஒவன்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிளென்டர்களுக்கு 20% வரை பண விலைக்கழிவுகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன. மேலும், மாதாந்தக் கட்டணமாக 1,999 ரூபாயை மாத்திரம் செலுத்தி, புத்தம் புதிய லப்டொப் ஒன்றை கொள்வனவு செய்ய முடியும்.

நுகர்வோருக்கு பரந்தளவு உயர் தரம் வாய்ந்த சர்வதேச வர்த்தக நாமங்களை வழங்குவதில் சிங்கர் ஸ்ரீ லங்கா புகழ்பெற்று காணப்படுகிறது. தனது நுகர்வோருடன் பரந்தளவு விநியோக வலையமைப்பினூடாக தொடர்புகளை பேணி வருவதுடன், இதற்காக தன்வசம் 430 விற்பனை நிலையங்களையும், 2800 விற்பனையாளர்களையும் நாடு முழுவதிலும் கொண்டுள்ளது. மேலும் உறுதியான விற்பனைக்கு பிந்திய சேவை வலையமைப்பையும் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகளாக இலங்கையின் முதல் தர மக்களின் மனங்கவர்ந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு...

2025-03-26 12:20:43
news-image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா...

2025-03-26 07:31:36
news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31