தமிழரசுக்கட்சியின் முப்புரம் வட்டாரத்திற்கான மூலக்கிளை நிர்வாகத் தெரிவில் குழப்பம் ஏற்பட்டதில் அக்கட்சியின் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிளை தெரிவின் பின்னர் பொதுமகன்கள் இருவர்களை தாக்கினார் என்ற முறைப்பாடு செய்யப்பட்டதன் விளைவாக புதுக்குடியிருப்பு பொலிசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர் .
நேற்று (31) தமிழரசுக்கட்சியின் முப்புரம் வட்டாரத்திற்கான மூலக்கிளை நிர்வாகத் தெரிவு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் முன்னிலையில் நடைபெற்றது.
மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இருவருக்கும் இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிர்வாகத் தெரிவில் தலைவருக்கான வாக்கெடுப்பு தேர்வில் முல்லை ஈசன் வெற்றி பெறுள்ளார் முப்புரம் வட்டாரத்தினை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் தோல்வியுற்றுள்ளார். .
இதன் பின்னர் பொதுமகன்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக புதுக்குடியிருப்பு பொலிசாரால் தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மேற்படி பிரதேச சபை உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM