J.M. Wickramarachchi & Co. இன் ஒரு துணை நிறுவனமான Wickramarachchi Opticians and Hearing Aids, தனது 40 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும், 400 இற்கும் மேற்பட்ட Cochlear செவிப்புல துணைச் சாதன உட்பொருத்தல்களை வெற்றிகரமாக பொருத்தியுள்ளதை குறிக்கும் முகமாகவும் விமரிசையான கொண்டாட்ட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
Cochlear இன் சர்வதேச நல்லெண்ணத் தூதுவரும், பிரபலமான அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கட் வீரருமான பிரெட் லீ இதில் கலந்து சிறப்பித்திருந்தார்.
கொழும்பு, கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இதனுடன் தொடர்புபட்ட சுகாதார மற்றும் அரசாங்க துறைகளைச் சார்ந்த 100 இற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இலங்கையில் செவிப்புலன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை நேரடியாகச் சந்திக்கும் முகமாக நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லவுள்ள கிரிக்கட் நட்சத்திரமான பிரெட் லீ, பல்வேறு தொடர் நிகழ்வுகள், விழிப்புணர்வு அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதுடன், Cochlear உட்பொருத்தல் சிகிச்சையைப் பெற்றுள்ள சிறுவர்களுடன் சிநேகபூர்வ கிரிக்கட் போட்டி ஒன்றிலும் பங்குகொள்ளவுள்ளார்.
வளர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பாரதூரமானது முதல் தீராத செவிப்புலன் குறைபாட்டைக் கொண்டுள்ளவர்களுக்கு Cochlear பொருத்தல் முறைமையானது பாதுகாப்பான, நம்பகமான மற்றும் திறன்மிக்க ஒரு சிகிச்சை முறையாகக் காணப்படுகின்றது.
பிறப்பிலேயே செவிப்புலன் குறைபாட்டுடன் பிறந்த சிறுவர்கள் மற்றும் மிதமான அளவில் செவிப்புலன் குறைபாட்டைக் கொண்டுள்ள மக்களுக்கு இது குறிப்பாக ஒரு வழமையான மருத்துவ சிகிச்சை முறையாகும்.
இதனைப் பொருத்தியுள்ளவர்கள் ஒலிகளைச் செவிமடுத்து, அனுபவித்து, தொடர்பாடல் ஆற்றல்களை மேம்படுத்த உதவி, அவர்களுக்கு சிறப்பான முறையில் கேட்டல் மற்றும் பேச்சு வாய்ப்புக்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட Wickramarachchi Opticians and Hearing Aids இன் பணிப்பாளர் சபைத் தலைவர் மிஹிர விக்ரமாராச்சி கருத்துத் தெரிவிக்கையில்,
“நான்கு தசாப்த காலத்திற்கும் மேலாக செவிப்புலன் துறையில் Wickramarachchi ஒரு முன்னணி வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வந்துள்ளது.
எம்மிடமுள்ள பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் செவிப்புலன் கலையை சிறப்பாக புரிந்து கொள்வதுடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, சிறப்பான உபகரண வசதிகளுடன், நவீன தொழில்நுட்ப முறைமைகள் எமது நவீன Wickramarachchi Institute of Speech and Hearing (WISH) பராமரிப்பு நிலையத்தில் செவிப்புலன் தொடர்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள உதவுகின்றன”.
“Cochlear Limited நிறுவனம், Cochlear உட்பொருத்தல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகித்து வருகின்றது. இது, செவிப்புலன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தமது வாழ்வில் கேட்கும் திறனை மீளவும் பெற்றுக்கொள்ள உதவும், உலகப் பிரசித்தி பெற்ற ஒரு உற்பத்தியாகும். உயர்ந்த தொழில்நுட்ப பேச்சு செயலி ஒன்றை இது கொண்டுள்ளதுடன், மனிதனின் செவிகளின் இயற்கையான தொழிற்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
ஒலியை பெருக்குகின்ற ஏனைய செவிப்புலன் துணைச் சாதனங்களைப் போலன்றி, Cochlear உட்பொருத்தலானது செவியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை தவிர்த்து, செவிப்புலன் நரம்பினை நேரடியாகவே தூண்டுகின்றது. எமது நாட்டிற்கு மிகச் சிறந்த உற்பத்தியை வழங்கும் இத்தகைய நிறுவனம் ஒன்றுடன் பங்காளராக இருப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்”.
Wickramarachchi Opticians மற்றும் Wickramarachchi Institute of Speech & Hearing (WISH) ஆகியன கொழும்பு, கண்டி, குருணாகல், காலி மற்றும் கேகாலை உட்பட நாட்டின் பிரதான நகரங்கள் அனைத்திலும் தொழிற்பாட்டுக் கிளைகளைக் கொண்டுள்ளன.
WISH நிலையங்கள் பல்வேறு விடயங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவை என்ற தனிச் சிறப்பைக் கொண்டுள்ளன. audiologyசெவிப்புலன் சிகிச்சை முறையை அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தமை, இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் முதற்தடவையாக ஒரு முழுமையான மதிப்பாராய்வு ஆய்வுகூடத்தை நிறுவியமை ஆகியவற்றை குறிப்பிட்டுக் கூற முடியும்.
ஒலிச்செறிவுமானி (Audiometer) மதிப்பாராய்வு மற்றும் சான்றுபடுத்தல், செவிகேள் பொறிகள் (Earphone) மற்றும் செவிப்புலன் துணைச் சாதனங்களை சோதித்தல், ஒலி வெளியேற முடியாத அறை (soundproof) மதிப்பாராய்வு, Headphone மதிப்பாராய்வு, எலும்பு கடத்தல் (Bone Conductor) மதிப்பாராய்வு, ஒலிபெருக்கி மதிப்பாராய்வு மற்றும் பொறியை உட்செலுத்தும் முறை (Insert Phone) மதிப்பாராய்வு ஆகிய சிகிச்சை முறைகள் இந்த நவீன சிகிச்சை நிலையத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வைத்தியசாலைகள், செவிப்புலன் ஆய்வு மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவுகளில் வழமையாக உபயோகிக்கப்படுகின்ற இத்தொழில்நுட்பம், குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கேற்ப ஒலி மட்டங்களின் அளவை மிகத் துல்லியமாக அளவிடுவதற்கு அத்தியாவசியமானது. இந்த ஒலியியல் ஆய்வுகூடத்தில் பணியாற்றும் ஒலியியல் பொறியியலாளர்கள் தொழிற்துறையின் எந்த வடிவத்திற்கும் ஏற்ப ஒலி மட்டங்களை உலகத் தரத்திற்கு ஒப்பானவை என்பதை உறுதிப்படுத்தல் அடங்கலாக, உலகிலுள்ள எந்தவொரு ஒலியியல் உபகரணத்தையும் மதிப்பாராய்வு செய்யும் வசதிகளைக் கொண்டுள்ளனர்.
இலங்கை, மாலைதீவ, பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே 30 இற்கும் மேற்பட்ட ஒலி வெளியேற முடியாத அறைகளை (soundproof) Wickramarachchi Opticians கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய கிளை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM