பி.எஸ்.எல்.வி., சி-45 ஏவுகணை இன்று (01.04.2019) காலை 9.27 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இந்தியாவின், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி., சி-45 ஏவுகணை, மின்னணு நுண்ணறிவு செயற்கை கோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கை கோள்களை சுமந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இவ் ஏவுகணை, உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் எடை 436 கிலோ ஆகும். ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டதை பொதுமக்களும் பார்க்கும் வகையில், ஏவுதளங்களில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. 

இவ்வரங்கத்தில், சுமார் 5,000 பேர் வரை அமரலாம் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.