தோனியின் அதிரடியான ஆட்டம் மற்றும் பிரவோவின் துல்லியமான பந்து வீச்சு என்பவற்றின் காரணமாக சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 12 ஆவது லீக் போட்டி நேற்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான்  அண்கிடையிலும் இடம்பெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டத்தை மாத்திரம் பெற்று, 8 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இந் நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் முகமாக சென்னை அணியின் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் :

ஒரு நாள் ஒரு டீமை ஏழு டீம் துரத்த அந்த டீம் தடையைத் தாண்டி @msdhoni புடிச்சி தொங்க ,அந்த #தல மேட்ச்ல அடி வெளுக்க, என்னடா இழவு வாழ்க்கைன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேட்ச்சாவதுன்னு, கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL #SuperDeluxe நன்றி சேது ஜி'' என்று பதிவிட்டுள்ளார்.