அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை அடுத்தடுத்து 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. 

இன்று அதிகாலை 5.14 மணிக்கு 4.9 ரிச்டர் அளவுகோளில் முதல் நிலநடுக்கம் உண்டானது. 

இதைத் தொடர்ந்து அடுத்த 2 மணி நேரத்தில் 4.7 ரிச்டர் அளவுகோளில் தொடங்கி 5.2 ரிக்டர் அளவுகோள் வரை 8 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வியல் மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.