வவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தா கல்லூரிக்கு அருகாமையில் வர்தகநிலையம் என்ற போர்வையில் கஞ்சாவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிஸார், குறித்த பகுதியில்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் வர்தக நிலையத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது 15 கிராம் 500 மில்லி கிராம் கஞ்சாவை கைப்பற்றியிருந்தனர். 

அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வர்தகநிலையத்தை நடத்திவந்த 31 வயதான வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யபட்டவர் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்