மற்றுமொரு ஜனாதிபதி தேர்தல் வேண்டாம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்துசெய்ய வலியுறுத்தி ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று மாலை பூண்டுலோயா நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சுலோகங்களை ஏந்தியவாறு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஜே.வி.பியின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.