ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல்.லின் 12 ஆவது லீக் போட்டி இன்று இரவு 8.00 தோனி தலைமையலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கிடையிலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பானது.

இப் போடியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய சென்னை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு 176 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 8 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

ரகானே டக்கவுட் முறையிலும், பட்லர் 6 ஓட்டத்துடனும், சஞ்சு சம்சன் 8 ஓட்டத்துடனும், ராகுல் திரிபாதி 39 ஓட்டத்துடனும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டத்துடனும், கெளதரம் 9 ஓட்டத்துடனும், பென்ஸ்டோக்ஸ் 46 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், ஆடுகளத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 22 ஓட்டத்துடனும், கோபால் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் தாகூர் மற்றும் இம்ரான் தாகீர் மற்றும் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், வீழ்த்தினர்.

இதன் மூலம் இத் தொடரில் சென்னை அணி தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல். இணையளத்தளம்