12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 12 ஆவது லீக் ஆட்டம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணிகளுக்கிடையே ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட சென்னை அணி ஆடுகளம் நுழையவுள்ளது.