பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 118 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 11 ஆவது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே ஆரம்பானது.

இப் போட்டியில் ஐதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடாதாக் காரணத்தினால் தலைமைப் பொறுப்பை புவனேஷ்வர் குமார் ஏற்று அணியை வழி நடத்தினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு  அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 231 ஓட்டங்களை குவித்தது.

ஐதராபாத் அணி சார்பில் பெயர்ஸ்டோ 114 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 100 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக் கொண்டனர்.

232 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 118 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு அணி சார்பில் பார்தீவ் படேல் 11 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹெட்மேயர் 9 ஓட்டத்துடனும், விராட் கோலி 3 ஓட்டத்துடனும், வில்லியர்ஸ் ஒரு ஓட்டத்துடனும், மொயின் அலி 2 ஓட்டத்துடனும், சிவம் டூப் 5 ஓட்டத்துடனும், பிரயாஸ் பார்மன் 19 ஓட்டத்துடனும், உமேஷ் யாதவ் 14 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 37 ஓட்டத்துடனும், சஹால் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் மொஹமட் நபி 4 விக்கெட்டுக்களையும், சண்டீப் சர்மா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்