உள்நாட்டு அறுவடை அதிகரித்துள்ளதால் சம்பா மற்றும் நாட்டரசியின் விலையைக் குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன் படி ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 15 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக, அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முதல் அமுலுக்கு வந்த குறித்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், அரசாங்கத்தினால் சம்பா மற்றும் நாட்டரசியின் ஒரு கட்டுப்பாட்டு விலை நாளை முதலாம் திகதி முதல் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பண்டிகைக்காலத்தில் அரிசிக்கான விலை மேலும் குறைவடையக்கூடிய சாத்தியமுள்ளதாக விவசாய பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது