(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியினை  மூடி மறைக்க  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி  ஸ்ரீ லங்கா சுதந்திர   கூட்டமைப்புடன் மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வெளியேறியதை தொடர்ந்தே பிணைமுறி மோசடியில் முன்னேற்றகரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.   விசாரணை அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு  குற்றவாளிகள் ஆரம்பத்தில் இருந்து  கைது செய்யபபட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  

இந் நிலையில் இம்மாத காலத்திற்குள்  ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவார். அவரை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மீது  விசாரணைகளுக்காக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிடார்.