12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று மாலை இடம்பெறவுள்ள 11 ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லயம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்கும், விராடல் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கிடையிலும் இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 4.00 மணிக்கு ஐதராபாத் ராஜிவ் காந்தி மைத்தானத்தில் இடம்பெறவுள்ளது.

சென்னை மற்றும் மும்பை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்துள்தனால் இப் போட்டியில் எழுச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

அதேபோல் முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் போராடி தோல்வியைத் தழுவிய ஐதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 199 ஓட்டங்களை துரத்தி அடித்து வெற்றி பெற்றது.

இந் நிலையில் இன்று மூன்றாவது போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6 போட்டிகளில் ஐதராபாத்தும், 5 போட்டிகளில் பெங்களூருவும் பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்துள்ளது. 

இதேதேவளை இன்று இடம்பெறவுள்ள மற்றுமோர் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணியும் மோதுகின்றன.

இத் தொடரின் 12 ஆவது லீக் ஆட்டமான இப் போட்டி இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சென்னை அணியை பொருத்தவரையில் தான் எதிர்கொண்ட முதல் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் பெங்களூரு அணியை வீழ்த்தியது. அத்துடன் இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுக்களினால் டெல்லி அணியை சாய்த்துள்ளது.

மறுபக்கம் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலாவது போட்டியில் 14 ஓட்டத்தினால் பஞ்சாப்பிடம் தோல்வியைத் தழுவியதுடன், இரண்டாவது போட்டியில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 198 ஓட்டங்களை குவித்தும் தோல்வியைத் தழுவியுள்ளது.

இந் நிலையில் இப் போட்டியில் வெற்றி பெற்ற வேண்டிய கடப்பாட்டில் ராஜஸ்தான் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 12 முறையும், ராஜஸ்தான் அணி 7 தடவையும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.