யாழ்.கைதடி பகுதியிலுள்ள உணவகத்தில் கடமையாற்றும் இளைஞன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

கைதடி சந்தியில் உள்ள  குறித்த உணவகத்திற்கு நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுக்கும் மேற்பட்டவர்கள் இளைஞனின் பெயரை கூறி கடைக்கு வெளியே அழைத்து இளைஞன் மீது தலைக்கவசத்தால் (ஹெல்மெட்) தாக்கி பின்னர் தாம் கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

குறித்த தாக்குதல் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூலாசிங்கம் ஜேசுதாஸ் (வயது 28) என்பவரே தாக்குதலுக்கு இலக்கானார். குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.