ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட காலி - மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் காலி வக்வெல்ல பகுதியில்  நேற்று தடம்புரண்டது.  

இதனையடுத்து, காலி - மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் குறித்த பகுதிக்கான ரயில் சேவை மீண்டும் சீர்செய்யப்பட்டுள்ளது.