நீராடச் சென்ற இளைஞனொருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரினுடாக செல்லும் கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹப்புதளையைச் சேர்ந்த 28 வயதுடைய கோகிலநாதன் என்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள இளைஞன் நேற்றுமுன்தினம் ரட்ணகிரிய பாமஸ்டன் எனும் ஊரில் இடம்பெற்ற பிறந்த நாள் வைபவதிற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சடலமானது பிரேத பரிசோதனைக்காக தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.