(இராஜதுரை ஹஷான்)

   எமது நாட்டின் நீதித்துறையை பலவீனப்படுத்தும்  செயற்பாடுகளுக்கு  இடமளிக்க முடியாது அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக விசாரணையின் ஊடாகவே தீர்வு காண முடியும்.   இவ்விடயத்தில்  அனைத்து தரப்பினரும்   நாட்டின் இறையாண்மையினை மதித்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வுக்காண சர்வதேச நீதிபொறிமுறையினையும், கலப்பு நீதிமன்ற உருவாக்கத்தினையும்  நாடமுயல்வது நாட்டின் நீதித்துறையினை பலவீனப்படுத்தும். இறுதிக்கட்ட யுத்தத்தில்  இராணுவத்தினர் சிவில் குற்றங்களை மேற்கொண்டிருந்தால்  நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்.  

இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சிவில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பொதுச்சட்டத்திலும், இராணுவ சட்டத்திலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று இராணுவதளபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்நிலைப்பாட்டிலே  நாங்களும் இருக்கின்றோம். மேற்குலக நாடுகள் செயற்படும்  விடுதலை புலிகளின் ஆதரவான  அமைப்புகளின் விரும்பங்களை எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக ஒருபோதும்  செயற்படுத்த இடளிக்க முடியாது.

 தற்போது   இலங்கையின் நீதித்துறையில் முறையான தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது என்று சர்வதேச நீதிபொறிமுறையினை நாடமுயற்சிப்பது எவ்வகையில்  சாத்தியமாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.