சிம்புவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் கல்யாணி என்ற நடிகை.

சிம்பு நடிக்கவிருக்கும்‘ மாநாடு ’படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘வந்தா ராஜாவை தான் வருவேன்’ என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு, தற்போது ஹன்சிகா கதையின் நாயகியாக நடிக்கும் ‘மகா’ படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதற்காக இயக்குநரின் வேண்டுகோளின் படி தன் உடல் எடையை குறைப்பதற்காக விசேட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மூத்த இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை சர்ச்சையான கருத்துகளை தொடர்ந்து வெளியிடும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இதனிடையே நடிகை கல்யாணி பிரியதர்ஷன், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.