தகாத உறவில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படுமென புரூனே நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புரூனே. இங்கு ஷரியா சட்டம் பின்பற்றப்படுகிறது.அதுவும் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியாவை காட்டிலும் இங்கு ஷரியா சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.