ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வோர்னர் மற்றும் பெயர்ஸ்டோவின் அதிரடியான ஆரம்பத்துடன் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு ஐதராபாத் ரஜிவ்காந்தி மைத்தானத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் மற்றம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 198 ஓட்டங்களை குவித்தது.

199 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணிக்கு அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான வோட்சன் மற்றும் பெயர்ஸ்டோ சிறந்த ஆரம்பத்த‍ை அதிரடியாக பெற்றுக் கொடுத்தனர்.

இதனால் ஐதராபாத் அணி முதல் ஐந்து ஓவர்களில் 54 ஓட்டத்தையும், 10 ஆவது ஓவரில் ஒன்பது ஓவரின் முடிவில் 104 ஓட்டங்களையும் விக்கெட் இழக்காது பெற்றனர். ஆடுகளத்தில் வோர்னர் 69 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ 34 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

எனினும் 9 ஆவது ஓவரின் நான்காவது பந்து வீச்சில் டேவிட் வோர்னர் மொத்தமாக 37 பந்துகளில் 9 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 69 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 10 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் பெயர்ஸ்டோ 28 பந்துகளில் 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 45 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் ஐதராபாத்  அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுக்க‍ளை இழந்து 117 ஓட்டத்தை பெற்றது.

ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் மற்றும் விஜய் சங்கர் 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து எதிர்கொண்ட பந்துகளில் வான வேடிக்கை காட்ட 14 ஆவது ஓவரின் முடிவில் ஐதராபாத் அணி 150 ஓட்டங்களை கடந்தது.

இந் நிலையில் அணித் தலைவர் 14 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியறினார். 15.3 ஆவது ஓவரில் விஜய் சங்கர் 15 பந்துகளில் 3 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக 35 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க மறுமுணையில் மணீஷ் பாண்டே அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார் (167-5).

இதையடுத்து ஆறவாது விக்கெட்டுக்காக யூசப் பத்தான் மற்றும் ரஷித் கான் ஜோடி சேர்ந்தாட 17 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை ஐதராபாத் பெற்றதுடன், வெற்றிக்கு 18 பந்துகளில் 20 ஓட்டங்கள் என்ற நிலை இருந்தது. 

இறுதியாக ரஷத் கான் 19 ஆவது ஓவரை எதிர்கொண்டு ரஜாஸ்தான் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடித்து நொருக்கினார். அதனால் ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 201 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் ரஷத் கான் 15 ஓட்டத்துடனும், யூசப் பத்தான் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஷிரியாஸ் கோபால் 3 விக்கெட்டுக்களையும், உனாட் கட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்