மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள்  மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் தீயில் கருகி உயிரிழந்த ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

குறித்த விபத்து இன்றிரவு  இரவு 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் 

இந்த விபத்தில் வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ் 3 ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் உயிரிழந்ததுடன் தீப்பற்றி எரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை .

இது பற்றி தெரியவருவதாவது, 

வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி இரவு 7.30 மணிக்கு 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்  சமாந்தரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இரு மோட்டர் சைக்கிள்களும் விபத்துக்குள்ளன நிலையில் பின் பகுதியல் வந்த  மோட்டர் சைக்கிளில் வந்த இருவரும் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது  

இந்த நிலையில் இரு மோட்டர்சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் அதில் ஒருவர் தீக்கிரையானதுடன், ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.