(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி நகரில் போதைப் பொருள் உள்ளடங்கிய களியட்டத்தில் பங்கேற்றிருந்த போது கைது செய்யப்பட்டு தற்போது பர் டுபாய் பொலிஸ் தடுப்பில் உள்ள பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் மற்றும் பாடகர் அமல் பெரேரா உட்பட பலர் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே குறித்த களியடடத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவன் கஞ்சிபானை இம்ரான், ஜங்கா, இளம் பாடகர் நதீமல் பெரேர உள்ளிட்டவர்கள்  நாடு கடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.