ஐக்கிய தேசிய கட்சியின்  முன்னாள் அமைச்சரான காலம்சென்ற  காமினி திஸாநாயக்கவின் மனைவியான  சிறிமா திஸாநாயக்க  இன்று கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  காலமாகினார்.

1994 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிப் பெற்றார்.2,715285 வாக்குகள் இவருக்கு கிடைக்கப் பெற்றது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர்  நவீன் திஸாநாயக்க மற்றும் வருணி தாருகா ஆகியோரது தாயாரான  சிறிமா திஸாநாயக்க 77 வயதில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.