‘Festival for Our Planet’ உடன் இடம்பெற்ற NGage அங்குரார்ப்பண நிகழ்வு

Published By: R. Kalaichelvan

29 Mar, 2019 | 04:45 PM
image

முன்னர் Bates Strategic Alliance நாமத்தில் இயங்கிய சந்தைப்படுத்தல் தொடர்பாடல் முகவர் நிறுவனம் தற்போது NGage Strategic Alliance எனும் நாமத்தின் கீழ் புதிய பரிணாமத்துடன் தம் சேவைகளை தொடர்கிறது.

சுற்றுச்சூழல் தொடர்பில் வலுவான பார்வையுடன் நடாத்தப்பட்ட இதன் அறிமுக விழாவானது,பொது மக்களுக்கு சூழல் தொடர்பான விழிப்புணர்வை வழங்கும் விதமாக Festival for Our Planet எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை புழழன ஆGood Market யசமநவ மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பு என்பன இணைந்து நடாத்தின.

காலநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கான நீதியை அளிக்குமாறு கோரி மார்ச் 15ஆம் திகதி உலகம் முழுதும் இடம்பெற்ற சிறார் பிரச்சார நிகழ்வான “Climate Strike” நிகழ்வின் தொடர்ச்சியாகவும் அதனை வரவேற்கும் விதமாகவும் இந்நிகழ்வு அதற்கடுத்த நாள் ஒருங்கமைப்பு செய்யப்பட்டது.

இந்நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான திரு. நிமல் குணவர்தனவினால் பசுமை சூழலுக்கான விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பல நிபுணர்களும் பேச்சாளர்களும்  கலைஞர்களும் பங்கேற்றனர். நிபுணர்கள்ரூபவ் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் UNSDG சட்டதரணிகள் மற்றும் முனைப்பாற்றல் பேச்சாளர்கள் போன்ற பன்னிரு சிரேஸ்டர்களால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் கடல் மாசடைதலை தடுப்பதன் ஊடாக சுற்றுச்சூழலை பாதுகாத்தல்ரூபவ் நீர் மற்றும் வளி, காடுகளை பாதுகாத்தல், புதைபடிமங்களை மீள்புதுப்பித்தலின் ஊடாக நிலையான நுகர்வினைப் பெறல் மற்றும்ஏனைய காலநிலை தொடர்பான பிரதான காரணிகள் தொடர்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

 அத்துடன் சூழல் பாதுகாப்பு தொடர்பான காணொளிகள் மற்றும் திரைப்படங்களும் பிரமாண்ட திரைகளில் ஒளிபரப்பப்பட்டன. மேலும் டிலாய் ஜோசப் மற்றும் சரித் டி சில்வா ஆகியோர் உருவாக்கிய சூழல் மாசடைதலை காண்பிக்கும் முகமூடிகளும் அங்கு காட்சியளித்தன.

சுற்றாடல் தொடர்பான சிறுவர்களின் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருந்த சிறார் விளையாட்டுப் பகுதியில் இடம்பெற்ற சித்திரம் வரைதல் நிகழ்வில் பற்பல சிறார்கள் ஆர்வமுடன் பங்கேற்றிருந்தனர். 

NGage நிர்மாணக்குழுவினால் அமைக்கப்பட்ட 20ற்கும் அதிக பதாதைக் கண்காட்சியும் இந்நிகழ்வில் இடம்பெற்றிருந்தது. இவற்றை பாடசாலை பிரயாணக் கண்காட்சிக்காக பயன்படுத்தமுடிவதோடு தமது பார்வையாளர்களுக்கு அல்லது ஊழியர்களுக்கு சூழல் தொடர்பான விழிப்புணர்வை வழங்க விரும்பும் எந்தவொரு நிறுவன அமைப்புக்களும் இதனை பெற்றுக்கொள்ளலாம்.

 இப்பதாதைகளுக்கான சிங்கள மற்றும் தமிழ் விளக்கங்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இதன் இறுதி நிகழ்வாக பாடகர் சித்ரா சோமபாலவின் இசைநிகழ்ச்சி இடம்பெற்றதுடன் இதில் எமது எழுத்தாளர்களில் ஒருவரான சின்த்தன தர்மதாச அவர்களால் எழுதப்பட்ட ‘வில்பத்துவே’ எனும் பாடலும் பாடப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் பாடகி நிர்மாலி மற்றும் இசைக்கலைஞர் திலான் விஜேசிங்க ஆகியோரும் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08