கல்வித் பொதுத்தர சாதாரண பரீட்சை முடிவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்று வேம்படி மகளீர் கல்லூரி முதலிடத்தை பிடித்துக் கொண்டது.

பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியது. அந்த முடிவுகளின் படி யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தியையும், 42 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுக் கொண்டனர். கொக்குவில் இந்து கல்லூரியில் 8 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும்,13 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டனர்.

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் 5 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் யாழ்ப்பாணம் அருணோதயாக் கல்லூயில் 5 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டனர்.

வேம்படி மகளீர் கல்லூரி 50 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், 49 மாணவிகள் 8 ஏ சித்திகளையும் பெற்று  முதலிடத்தில் உள்ளது.