(ஆர்.விதுஷா)

இவ் வருடத்தின் முதல்  மூன்று மாதங்களுக்குள் நாடு பூராகவும்  12  ஆயிரத்திற்கும் அதிகமானோர்  டெங்கு நோயால்  பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு  தெரிவித்துள்ளது. 

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலும், அதற்கு அடுத்தததாக யாழ் மாவட்டத்திலுமே இனங்காணப்பட்டுள்ளனர்.  

கொழும்பு மாநகர சபைக்கு  உட்பட்ட பகுதியில் 533 பேரும் கொழும்பின் ஏனைய  பகுதிகளில் 2164 பேரும் யாழில் 1580 பேரும் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.