மன்னார், மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஜூன் மாதம் 28 ஆம் திகதிக்கு மன்னார் நீதிவான் ரீ.சரவணராஜா ஒத்தி வைத்துள்ளார். 

திருகேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில்  உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்று (29.03.2019) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்தேக நபர்கள் 10 பேரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.