பொல்பித்திகம மற்றும் புத்தல பாதுகாப்பு வனப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலினால் 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. 

 

தீப்பரவல் ஏற்பட்டமை குறித்து பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, பொலிஸார் மற்றும் குருணாகல் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.